திருப்போரூர், மார்ச் 27: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் விடையாற்றி உற்சவம் நிறைவு விழாவில், பழங்கள் அலங்காரத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், மாசி மாதம் பிரம்மோற்சவ விழா கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, காலை மற்றும் மாலை நேரத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 15ம்தேதி முருகன் திருக்கல்யாணத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்த நிலையில், விடையாற்றி உற்சவம் தொடங்கி நடைபெற்று வந்தது.
விழாவின் நிறைவு நாளான நேற்று விடையாற்றி உற்சவத்தின்போது, தங்க மயில் வாகனத்தில் பழங்கள் அலங்காரத்தில் முருகப்பெருமான், நான்கு மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
The post திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் விடையாற்றி உற்சவம் நிறைவு பழங்கள் அலங்காரத்தில் முருகப்பெருமான் வீதியுலா: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.