காரியாபட்டியில் குடிநீர் திட்டப் பணிகள் விறுவிறு பேரூராட்சி தலைவர் ஆய்வு

காரியாபட்டி, மார்ச் 27: காரியாபட்டி பேரூராட்சியில் குடிநீர் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. காரியாபட்டி பேரூராட்சியில் தற்போது அம்ரூத் திட்டத்தின் மூலமாக அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய்கள் பதித்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடை காலம் வந்து விட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டப் பணிகளை பேரூராட்சி தலைவர் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மற்றும் பொறியாளர் ஆகியோர் பார்வையியிட்டனர்.

The post காரியாபட்டியில் குடிநீர் திட்டப் பணிகள் விறுவிறு பேரூராட்சி தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: