வாலிபரை வெட்டிய 2 பேர் கைது

திருச்சி, மார்ச் 27: ரங்கம் திருவளர்ச்சோலை அரிகே மது போதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ரங்கம் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்மேகம் (25). மார்ச் 24ம் தேதி தன் வீட்டின் அரிகே நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார், அப்போது அங்கு மது போதையில் வந்த 2 பேர் கார்மேகத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த கார்மேகம் ரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ரங்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (25) மற்றும் ராபர்ட் (48) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

The post வாலிபரை வெட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: