மணல் திருட்டை தடுக்க கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 27: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டைகரை ஆற்று பகுதியில் நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டைக்கரை ஆற்றில், சனவேலி, கொக்கூரணி, செட்டியகோட்டை, ஆனந்தூர், கோவிந்தமங்கலம், குலமாணிக்கம் வெட்டுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் மணல் உள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மணல் திருட்டு நடப்பதும், அதனை போலீசார் தடுத்து வழக்கு போடுவதும் வழக்கமாக உள்ளது. மணல் திருட்டுக்களை தடுக்கும் விதமாகவும், மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிழைப்புக்கு வழிகாட்டும் விதமாகவும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். மேலும் போலீசார் தீவிர ரோந்து செய்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மணல் திருட்டை தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: