பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

திருவாரூர், மார்ச் 26: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி திருவாரூரில் நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறை அமைக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பிற்கு ஊதியம் வழங்க வேண்டும், அரசு பணியாளர்களுக்கு தொழில்வரியினை ரத்து செய்திட வேண்டும்,

சாலை பணியாளர்களுக்கான 41 மாத பணிநீக்க காலத்தினை பணிகாலமாக அறிவித்து பணபலன்களை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாவட்ட செயலாளர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் குணசீலன், பொறுப்பாளர்கள் வேலாயுதம், முருகானந்தம், குமார், சாகுல் அமீது உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: