அரியலூர், மார்ச் 26: AAY, PHH குடும்ப அட்டை குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றுஅரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,அரியலூர் மாவட்டம், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும், சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் மார்ச் 31ம் தேதிக்குள்,
தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என சென்னை, உணவுப் பொ ருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.அதன்படி AAY மற்றும் PHH பயனாளிகளின் குடும்ப அட்டைகளில்உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் மார்ச் 31ம் தேதிக்குள் (திங்கட்கிழமை) அத்தியாவசிய உணவு பொருட்கள் பெறும் நியாய விலைக்கடை மற்றும் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள நியாயவிலைக்கடை செயல்படும் வேலை நாட்களில் அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post AAY, PHH குடும்ப அட்டை உறுப்பினர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.