காரைக்கால், மார்ச் 26: காரைக்கால் அடுத்த நேரு நகரில் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி உள்ளது. இங்கு உலக சாதனை போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர், பயிற்சி மாணவி க.அகல்யா என்பவர் 1602 தொல்காப்பிய நூற்பாக்களை 22 மணி 40 நிமிடத்தில் பேனரில் தொல்காப்பியர் உருவத்தில்(பதாகை)எழுதி சாதனை செய்து காரைக்காலுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரின் இந்த முயற்சிக்குத் தமிழ் ஆர்வலர்களும், கல்லூரி முதல்வர் கந்தவேலு மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.
The post 1602 தொல்காப்பிய நூற்பாக்களை தொல்காப்பியர் உருவத்தில் வரைந்து ஆசிரியை சாதனை appeared first on Dinakaran.