மீண்டும் ஹீரோயினான இனியா

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர், இனியா. ஆரம்பத்தில் சிறுபட்ஜெட் படங்களில் நடித்த அவர், பிறகு ‘வாகை சூட வா’, ‘மௌனகுரு’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். திடீரென்று இரண்டாம் நிலை கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இந்நிலையில், ‘சீரன்’ படத்தில் மீண்டும் இனியா ஹீரோயினாக நடித்துள்ளார். அவரது ஜோடியாக ஜேம்ஸ் கார்த்தி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

செய்யாறு பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கலப்பு திருமணம் செய்த காரணத்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தம்பதிகள் எப்படி வெற்றிபெற்று, பிறகு ஊரே ெகாண்டாடுபவர்களாக மாறுகின்றனர் என்பது கதை. இதில் இளம்பெண், நடுத்தர வயது தாண்டிய பெண் ஆகிய இரண்டு கெட்டப்புகளில் இனியா நடித்துள்ளார். இப்படம் தனக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.

The post மீண்டும் ஹீரோயினான இனியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: