நாளை மறுநாள் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன பிறகு கடைசி படமாக மாமன்னன் படத்தை அறிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தில் லால், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகின்ற ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வடிவேலு பாடிய ராசா கண்ணு மற்றும் ரஹ்மான் பாடிய ஜிகு ஜிகு ரயில் ஆகிய பாடல்கள் வெளியாகின.

இவற்றில் வடிவேலு பாடிய பாடலுக்கு அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு குறித்து அறிவித்துள்ளனர். வருகின்ற ஜூன் 1ம் தேதி அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கிறது என போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் . இதில் சிறப்பு விருந்தினராக நடிகர்கள் கமல், தனுஷ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post நாளை மறுநாள் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: