தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் 41 ஆயிரம் பேருக்கு கணினி பட்டா வழங்க நடவடிக்கை

 

தூத்துக்குடி, மார்ச் 24: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சொந்த இடங்களில் குடியிருப்போர் கணினி பட்டாபெறாமல் இருந்த நிலையில் கடந்த பிப். 7ம் தேதி அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு முகாம் நடத்தினார். இதில் 3,500க்கும் மேற்பட்டோர் கணினி பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை கணினியில் பதிவேற்றம்செய்து முதற்கட்டமான 151 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2ம் கட்டமாக கணினி பட்டா வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக கலெக்டர் இளம்பகவத் தலைமையில் ஆர்டிஓ பிரபு முன்னிலையில் நடந்தது. தாசில்தார் முரளிதரன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், 2ம் கட்டமாக தேர்வுசெய்யப்பட்ட பயனாளிகள் 131 பேருக்கு பட்டாக்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் ‘‘தூத்துக்குடி தொகுதி மக்கள் கணினி பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 2ம் கட்டமாக வழங்குவதின் மூலம் தொகுதி மக்கள் மட்டுமின்றி, நான் கலெக்டர் உள்பட எல்லோரும் மன மகிழ்ச்சியாக இருக்கிறோம். காரணம் கிரைய பத்திரம் பலர் வைத்திருப்பாா்கள் உாிமை பட்டா கேட்டு விண்ணப்பத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவதின் மூலம் இது தான் உங்கள் இடம் என்பதற்கு இது மிகப்பொிய ஆதாரமாக அமையும். சட்டமன்ற தொகுதிக்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்குவதற்கு கலெக்டர் சிறப்பு குழு அமைத்துள்ளார். அதன்மூலம் இந்த பணி முழுமையாக நடக்கிறது. 5 பேர் கொண்ட கூட்டு பட்டா பலர் வைத்திருப்பார்கள் தனிப் பட்டா வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இடத்தின் நிலை குறித்து வருவாய் துறையினரின் ஆய்வுக்கு பிறகு வழங்கப்படுகிறது.

 

The post தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் 41 ஆயிரம் பேருக்கு கணினி பட்டா வழங்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: