அரியலூரில் காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி

 

அரியலூர், மார்ச் 26: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் உத்தரவின்படி, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.இப்பேரணியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணைக் காவல் கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கென்னடி முன்னிலை வகித்தார் .

இதில் அரியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் அரியலூர் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை வரை, தீண்டாமையை ஒழிக்கவும், ஏற்ற தாழ்வும் இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகை ஏந்தியும் பேரணி நடைபெற்றது. பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிறுவன பயிற்றுநர்கள் மற்றும் சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு அலுவலர்கள், காவல் உதவி ஆய்வாளர் ரவி, புள்ளியியல் ஆய்வாளர் பாப்பாத்தி, சிற ப்பு உதவி ஆய்வாளர் சுமதி, காவலர் கார்த்திக், ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: