திருவாரூர், மார்ச் 26: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அனைத்து கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் மோகனசந்திரன் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைகளின்படி திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துதல் தொடர்பாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் 1951, வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்துதல் விதிகள் 1961, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தல்கள், கையேடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வலுவான மற்றும் வெளிப்படையான சட்ட கட்டமைப்பை நிறுவுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என்றார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.