கறம்பக்குடி, மார்ச் 26: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துவார் ஊராட்சி உள்ளது. கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளங்குருச்சி ஊராட்சி மங்கான் கொள்ளை பட்டி கிராமம் உள்ளது. துவார் ஊராட்சி கெண்டையன் பட்டி சாலையில் இருந்து முள்ளங்குருச்சி ஊராட்சி மங்கான் கொள்ளை பட்டி இணைப்பு சாலை வரை தார் சாலை அமைத்து சீரமைக்க பட வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர்.
அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில் இணைப்பு சாலை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தி ரூ.1.66 கோடி நிதி வழங்கி பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இந்த இணைப்பு சாலை அமைக்க நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அத்துறை அமைச்சர், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட திமுக செயலாளர், ஒன்றிய கழக செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட அனைவருக்கும் 2 ஊராட்சி களையும் சேர்ந்த பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.
The post கறம்பக்குடி அருகே இணைப்பு சாலை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.