சீர்காழி, மார்ச் 26: சீர்காழி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் இன்று 26ம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஆச்சாள்புரம், மாங்கனாம்பட்டு, தைக்கால், கொள்ளிடம், ஆணைக்காரன் சத்திரம், நல்லூர், நாவல் படுகை, மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டிணம், மாதானம், பழையப்பாளையம், பச்சை பெருமாள் நல்லூர், சியாளம், தாண்டவன் குளம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post சீர்காழியில் இன்று மின் நிறுத்தம் appeared first on Dinakaran.