அரியலூர், மார்ச் 26: அரியலூர் புத்தக திருவிழாவில் இன்று செல்ல பிராணிகள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் உரிமையாளர்கள் தங்களது செல்ல பிராணிகளை கண்காட்சிக்கு அழைத்து வரலாம் என்று மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 8வது அரியலூர் புத்தகத் திருவிழா 2025ம் ஆண்டு மார்ச் 20 முதல் மார்ச் 29 சனிக்கிழமை வரை அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபம், வாலாஜா நகரம், அரியலூரில் நடைபெற்று வருகிறது.
இப்புத்தகத் திருவிழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மார்ச் 26ம் தேதி ( இன்று) செல்லப்பிராணிகள் கண்காட்சி (நாய்கள்) மற்றும் மார்ச் 27ம் தேதி ( நாளை) கால்நடை கண்காட்சி நடைபெற உள்ளது.இதில் மார்ச் 26ம் தேதி அன்று செல்லப்பிராணிகளை வளர்போருக்கு தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பு மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மேலும் இரண்டு நாட்களிலும் கலந்துக்கொள்ளும் அனைத்து செல்லப்பிரணிகள் மற்றும் கால்நடைகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள செல்ல பிராணி உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கண்காட்சிக்கு அழைத்து வந்து கண்காட்சியில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post அரியலூர் புத்தக திருவிழாவில் இன்று செல்ல பிராணிகள் கண்காட்சி appeared first on Dinakaran.