டேட்டிங் வாழ்க்கை உண்மையானது; காதலனின் நிர்வாண படத்தை வெளியிட்ட நடிகை மலைகா: பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை: தனது காதலன் அர்ஜுன் கபூரின் நிர்வாண புகைப்படத்தை மலைகா அரோரா வெளியிட்டதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோரா, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரும் டேட்டிங்கில் இருந்து வந்தனர். ஆனால் அவர்கள் பொதுவெளியில் ஒப்புக் கொள்ளவில்லை. நீண்ட காலமாக தங்கள் உறவை மறைத்து வைத்திருந்தனர். தற்போது இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று மலைகா அரோரா, தனது காதலன் அர்ஜுன் கபூரின் நிர்வாண புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில், சோபாவில் சாய்ந்து படுத்திருக்கும் அர்ஜுன் கபூர், ஆடையின்றி காணப்பட்டார். அவரது அந்தரங்க பகுதியில் ‘குஷன்’ போட்டு மறைக்கப்பட்டுள்ளது. மலைகா அரோராவின் பதிவில், ‘மை வெரி ஓன் சோம்பேறி பையன்’ என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலானதால், பலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் அர்ஜுன் கபூர் பதிவிட்ட பதிவில், ‘ஹார்ட்’ எமோஜியுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் அதில், ‘அமைதியைத் தேர்ந்தெடுங்கள், அமைதியாக முன்னேறுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

The post டேட்டிங் வாழ்க்கை உண்மையானது; காதலனின் நிர்வாண படத்தை வெளியிட்ட நடிகை மலைகா: பாலிவுட்டில் பரபரப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: