ஆஷிஷ் வித்யார்த்தி மனைவி உருக்கம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட 11 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள ஆஷிஷ் வித்யார்த்தி, யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். 60 வயதான அவர், 50 வயதுள்ள அசாம் காஸ்ட்யூம் டிசைனர் ரூபாலி பருவாவை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ஆஷிஷ் வித்யார்த்தி முதல் மனைவி ராஜோஷி பருவா உருக்கமான பதிவுகள் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பதிவில், ‘ஒரு சரியான நபர், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்க மாட்டார்.

உங்கள் மனம் புண்படும்படியும் நடந்துகொள்ள மாட்டார். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ‘அதிக சிந்தனையும், சந்தேகமும் உங்கள் மனதில் இருந்து நீங்கட்டும். அமைதி உங்கள் வாழ்க்கையை தெளிவாக்கட்டும். நீண்ட காலமாக வலிமையானவராக இருக்கிறீர்கள். உங்கள் ஆசிகளைப் பெற இதுவே சரியான தருணம். உண்மையிலேயே இதற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர்’ என்று கூறியுள்ளார்.

The post ஆஷிஷ் வித்யார்த்தி மனைவி உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: