ஐதராபாத்: தெலுங்கு சீனியர் இயக்குனர் கே.வாசு (72) திடீரென்று மரணம் அடைந்தார். கடந்த 1978ல் ‘பிராணம் கரீது’ என்ற படத்தில் சிரஞ்சீவியை அவர் அறிமுகப்படுத்தினார். சிரஞ்சீவி முதலில் ‘புனாதிரல்லு’ என்ற படத்தில் நடித்திருந்தாலும், அதற்கு முன்பு கே.வாசு இயக்கிய ‘பிராணம் கரீது’ படம் திரைக்கு வந்தது. கே.வாசு இயக்கிய ‘ ஷீரடி சாய்பாபா’ படம், இந்தியா முழுவதும் சாய்பாபா பக்தர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்தது. கே.வாசு பிரபல தெலுங்கு இயக்குனரான கே.பிரத்யகாத்மாவின் மகனும், இயக்குனர் ஹேமாம்பரதர ராவின் சகோதரரும் ஆவார். கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கே.வாசு, நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கு படவுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.
சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரின் மறைவு குறித்து நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘மூத்த இயக்குனர் கே.வாசு தற்போது நம்மிடம் இல்லை என்ற செய்தி எனக்கு அதிக வருத்தம் அளிக்கிறது. திரையுலகப் பயணத்தின் ஆரம்ப நாட்களில் நான் நடித்த ‘பிராணம் கரீது’, ‘தொடு டொங்காலு’, ‘அல்லுல்லோஸ்துன்னாரு’, ‘கோத்தலா ராயுடு’ ஆகிய படங்களை இயக்கி னார். திடீரென்று அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங் கள்’ என்று தெரிவித்துள்ளார்.
The post சிரஞ்சீவியை அறிமுகம் செய்த தெலுங்கு இயக்குனர் திடீர் மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.