எண்ணெய் வாழைக்காய் கறி

தேவையானவை:

முற்றிய வாழைக்காய் – 2,
எண்ணெய் – 10 டேபிள் ஸ்பூன்,
கடலை மாவு – 6 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
அரிசிமாவு – 3 டேபிள்ஸ்பூன்,
சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் – ½ டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 10 இதழ்கள்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மூன்று மாவுகளையும் சேர்த்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து ¼ கப் நீர்விட்டு கலக்கவும். வாழைக்காயைத் தோல் சீவி கனமான வில்லைகளாக அரிந்து மாவு கலவையில் சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும். வாணலியில் 10 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து அதில் வாழைக்காய் வில்லைகளை சேர்த்து நன்றாக சிவக்க வறுக்கவும்.

 

The post எண்ணெய் வாழைக்காய் கறி appeared first on Dinakaran.