பீன்ஸ் சாதம்

தேவையானவை:

பீன்ஸ் – ¼ கிலோ (பொடியாக நறுக்கியது),
உதிராக வடித்த சாதம் – 2 கப்,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க:

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
துவரம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்,
முழு உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் – 3,
பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் ெகாரகொரப்பாகப் பொடிக்கவும். அதே வாணலியில் 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டுப் பீன்ஸை வதக்கி மூடிவைக்கவும். இடையே திறந்து உப்பு சேர்த்துக் கிளறிவிடவும். தண்ணீர் சேர்க்ககூடாது. பீன்ஸ் வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியினை தூவி ஒரு முறை நன்கு கிளறி சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு இறக்கவும்.

 

The post பீன்ஸ் சாதம் appeared first on Dinakaran.