மாடர்ன் லவ் சென்னை- ஓடிடி விமர்சனம்

உலகப் புகழ்பெற்ற ‘மாடர்ன் லவ்’ தொடரின் சிறந்த கதைகளை தமிழுக்கு ஏற்ப மாற்றி, 6 அத்தியாயங்களுடன் கூடிய ஆந்தாலஜி தொடராக வழங்கியுள்ளது, அமேசான் பிரைம் வீடியோ. இதில் ‘லாலாகுண்டா பொம்மைகள்’ அத்தியாயத்தை ராஜூ முருகன், ‘இமைகள்’ அத்தியாயத்தை பாலாஜி சக்திவேல், ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ அத்தியாயத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார், ‘மார்கழி’ அத்தியாயத்தை அக்‌ஷய் சுந்தர், ‘பறவைக் கூட்டில் வாழும் மான்கள்’ அத்தியாயத்தை பாரதிராஜா, ‘நினைவோ ஒரு பறவை’ அத்தியாயத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளனர். இதில் முதல் 2 அத்தியாயங்களுக்கு ஷான் ரோல்டன், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளனர். மற்ற 3 அத்தியாயங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பின்னணி இசையில் புதுமை செய்திருந்தாலும், தனது பழைய பாடல்களைப் பயன்படுத்தி இருக்கிறார். அதோடு, மாடர்ன் இசையிலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

எல்லா எபிசோடுகளையும் பிரபல இயக்குனர்கள் இயக்கி இருந்தாலும், அவர்கள் தங்கள் அடையாளத்தை இதில் பதிக்காமல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்துள்ளனர். நாகரீக காதல், இன்றைய இளைஞர்களின் காதல், மாற்றுத்திறனாளியின் காதல் என்று விதவிதமான காதலைப் பற்றி இப்படங்கள் பேசுகின்றன. விஷூவலுக்கும், இசைக்கும் கொடுத்துள்ள முக்கியத்துவத்தை ஏனோ கதையை விறுவிறுப்பாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. எல்லா எபிசோடுகளும் மெதுவாக நகர்ந்து கவிதையாக முடிகிறது. ஒரேநேரத்தில் அத்தனை எபிசோடுகளையும் பார்க்க முடியாவிட்டாலும், ஒருநாளைக்கு ஒரு எபிசோடு என்ற ரீதியில் பொறுமையாகப் பார்த்து ரசிக்கலாம்.

The post மாடர்ன் லவ் சென்னை- ஓடிடி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: