நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெறுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுபற்றி வருண் சக்ரவர்த்தி கூறுகையில், ‘ஆகாயத்தில் இரவில் மில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இந்த சூப்பர் ஸ்டார், வாழ்க்கையில் ஒரே ஒருமுறை தோன்றக்கூடிய நட்சத்திரம். கடைசியாக அது நடந்துவிட்டது. ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்’ என்றார்.
The post “வாழ்க்கையில் ஒரே ஒருமுறை தோன்றக்கூடிய நட்சத்திரம் இந்த சூப்பர் ஸ்டார்”: வருண் சக்ரவர்த்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.