‘என்டிஆர் 30’ திரைப்படத்துக்கு ‘தேவாரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடி கமெண்ட்டில் இதயம் மற்றும் ஃபயர் எமோஜிகளை பதிவு செய்து வருகின்றனர். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், காந்த் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனர்களின் கீழ் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் 2024 ஏப்ரல் 5ம் தேதி வெளியாகிறது. கர் பிரசாத் இந்தப் படத்தில் படத்தொகுப்பு செய்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை சாபு சிரில் கையாளுகிறார்.
The post ஜூனியர் என்டிஆர் பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.