இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுவது குறித்து மற்றும் பரப்புதல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. விவரம் பின்வருமாறு: இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி, ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் 05.02.2025 (புதன்) காலை 7 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்பக்கூடாது.
ஈரோடு இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்திலும் காட்சிப்படுத்த கூடாது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கருத்துக் கணிப்புகள் எப்போது வெளியிடலாம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.