இந்தியா உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்து வருகிறது. சோழ வம்சத்தின் கடல்சார் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அர்ப்பணிக்கப்பட்ட ஐஎன்எஸ் நீலகிரி, குஜராத்தின் துறைமுகங்கள் இந்தியாவை மேற்கு ஆசியாவுடன் இணைத்ததை நினைவூட்டும் சூரத் போர்க்கப்பல் உள்ளிட்ட புதிய கப்பல்கள் தொடங்கி வைக்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வாரி என்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பி75 வகைப்பாட்டில் ஆறாவது வக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பல் இயக்கப்பட்டது. இந்த புதிய கப்பல்கள், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்தும். உலகளவில், குறிப்பாக தென்பகுதியில் நம்பகமான மற்றும் பொறுப்பான நட்பு நாடாக இந்தியா தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், பாதுகாப்பு இணையமைச்சர் சஞ்சய் சேத், மகாராஷ்டிர துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* ஐஎன்எஸ் சூரத், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்ட போர்க்கப்பல்.
* ஐஎன்என் நீலகிரி கப்பலுக்கான 75 சதவீத உபகரணங்கள், சிறு, குறு நிறுவனங்கள் உட்பட இந்தியாவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டவை.
The post மும்பையில் நடந்த விழாவில் மூன்று போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி appeared first on Dinakaran.