சூலூர்: கோவை சூலூர் அருகே பட்டணம், ராமலிங்க நகரை சேர்ந்தவர் பழனிசாமி (55). சுல்தான்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 30ம் தேதி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றார். பணி முடிந்து கடந்த 6ம் தேதி கோவை திரும்பினார். அன்று மதியம் கருமத்தம்பட்டியில் நிறுத்திய பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். சூலூர் பைபாஸ் சாலையில் சித்தாமணிப்புதூர் சிக்னல் அருகே முன்னால் சென்ற நான்கு சக்கர வாகனம் மீது பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட எஸ்எஸ்ஐ சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, 21 குண்டு முழங்க எஸ்எஸ்ஐ பழனிசாமி உடல் தகனம் செய்யப்பட்டது.
