கேரளாவில் நாளை முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்

 

திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நாளையும், திருச்சூர் பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 13ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. 6 மாநகராட்சிகள், 86 நகரசபைகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 152 பிளாக் பஞ்சாயத்துகள் மற்றும் 941 கிராம பஞ்சாயத்துக்கள் என மொத்தம் 1199 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 23,576 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மொத்தம் 75,632 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெரும்பாலான வார்டுகளில் இடதுசாரி, காங்கிரஸ் மற்றும் பாஜ ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 7 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories: