புதுடெல்லி: சிபிஐ ஆய்வாளர் ரகுல் ராஜ் சிறப்பாக பணியாற்றியதற்காக கடந்த 2023ம் ஆண்டு ஒன்றிய உள்துறை அமைச்சரின் சிறப்பு புலனாய்வு பிரிவில் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், மலாய் செவிலியர் கல்லூரியின் உரிமையாளரிடம் இருந்து ரூ.10லட்சத்தை சட்டவிரோதமாக பெற்றபோது ரகுல் ராஜ் பிடிபட்டார். இதனை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லஞ்சம் கொடுத்த தம்பதியும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் கைதான சிபிஐ ஆய்வாளர் ரகுல் ராஜிடம் இருந்த பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. பதக்கத்தை ரத்து செய்யும் சிபிஐ இயக்குனர் பிரவீன் சூத் பரிந்துரையினை உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
The post லஞ்ச வழக்கில் கைதான சிபிஐ ஆய்வாளரின் பதக்கம் பறிப்பு appeared first on Dinakaran.