விமான போக்குவரத்துத்துறை, இந்திய உணவு கழகத்துக்கு புதிய தலைவர்கள் நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய பணியாளர் அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “தற்போது விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கூடுதல் செயலராக பொறுப்பு வகித்து வரும், 1996ம் ஆண்டு மத்தியபிரதேச பிரிவை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பைஸ் அகமது கித்வாய் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலராக பொறுப்பு வகித்து வரும் அசுதோஷ் அக்னிஹோத்ரி இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் இயக்குராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் 1998ம் ஆண்டு மத்தியபிரதேசத்தை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆகாஷ் திரிபாதி தற்போது மின்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் அமைச்சகத்தின் கூடுதல் செயலராக பொறுப்பு வகித்து வரும் கமல் கிஷோர், இனி ஜல் ஜீவன் மிஷனின் இயக்குநராகவும், கூடுதல் செயலராகவும் பதவி வகிப்பார். வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் செயலாளர் சுபா தாக்கூர், உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மாநிலங்களுக்கிடையேயான செயலகத்தில் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post விமான போக்குவரத்துத்துறை, இந்திய உணவு கழகத்துக்கு புதிய தலைவர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: