நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான விரிவான கொள்கையை உருவாக்குவதில் அவரது பங்கு முக்கியமானது. 2004ம் ஆண்டு மன்மோகன் சிங் இந்திய பிரதமரானார். 2009ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமரானார். வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த26ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். டெல்லியில் யமுனை நதியை ஒட்டியுள்ள நிகம்போத் காட் என்ற இடத்தில் பொது மயானத்தில் 28ம் தேதி மன்மோகன் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மன்மோகன் சிங்கின் நினைவாக பிரார்த்தனை கூட்டம் அவரது இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் துணை ஜனதிபதி ஹமீத் அனசாரி, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி, அகந்த் பாதை போக் நிகழ்ச்சி நடந்தது. இதில் மன்மோகன்சிங்கின் மனைவி குர்ஷரண் கவுர் குரு கிரந்த சாகிப் புனித நூலில் இருந்து பாடல்களை பாடினார்.
The post முன்னாள் பிரதமர் மன்மோகன் நினைவு பிரார்த்தனை கூட்டம்: ஹமீத் அன்சாரி, சோனியா, கார்கே பங்கேற்பு appeared first on Dinakaran.