ஆசியாவிலேயே பெங்களூருவில் அதிக போக்குவரத்து நெரிசல்

பெங்களூரு: ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகமான நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. ஐடி நகரமான பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசலில் முதலிடத்தில் இருப்பது பெங்களூரு தான் என்று டாம்டாம் டிராபிக் இன்டெக்ஸ் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் வாகனங்கள் 10 கிமீ தொலைவை கடக்க சராசரியாக 28 நிமிடம் 10 வினாடிகள் ஆவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 132 மணி நேரங்கள் கூடுதலாக பீக் நேரங்களில் டிராபிக்கில் செலவு செய்வதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

டாம்டாம் டிராபிக் இன்டெக்ஸ் ஆய்வறிக்கையின்படி, பெங்களூருவிற்கு அடுத்த இடத்தில் ஆசியாவிலேயே டிராபிக் மிகுந்த நகரமாக புனே திகழ்கிறது. புனேவில் 10 கிமீ தொலைவைக் கடக்க, 27 நிமிடம் 50 வினாடிகள் ஆவதாகவும், இந்த பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் பிலிப்பைன்சின் மணிலா நகரமும், 4ம் இடத்தில் தைவானின் தைசுங் நகரமும் உள்ளன. மணிலாவில் 10 கிமீ தொலைவைக் கடக்க 27 நிமிடம் 20 வினாடி மற்றும் தைசுங்கில் 10 கிமீ தொலைவைக் கடக்க 26 நிமிடம் 50 வினாடி ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாம்டாம் டிராபிக் இன்டெக்ஸ் ஆய்வுப்படி உலகிலேயே லண்டன் தான் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆசியாவிலேயே பெங்களூருவில் அதிக போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: