மணிப்பூரில் பதற்றம்; எஸ்பி அலுவலகத்தை சூறையாடிய கும்பல்

இம்பால்: மணிப்பூரில் காங்போக்பி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்குள் புகுந்து கும்பல் சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் கலவரம் நீடித்து வருகிது. இம்பால் கிழக்கு மாவட்ட எல்லையான சைபோல் கிராமத்தில் இருந்து ஒன்றியப் படையை அகற்றத் தவறியதாக கூறி காங்போக்பி மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நேற்று மாலை ஒரு கும்பல் தாக்கியது.

இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் எஸ்பி அலுவலகத்தை நோக்கி கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் எஸ்பி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மாவட்ட போலீசாரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பதற்றம் நிலவுகிறது.

The post மணிப்பூரில் பதற்றம்; எஸ்பி அலுவலகத்தை சூறையாடிய கும்பல் appeared first on Dinakaran.

Related Stories: