இந்நிலையில் கழிவுகளை இடமாற்றம் செய்வதால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்துக்கு கவலை தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளது. பிதாம்பூர் பச்சோ சமிதி அமைப்பு சார்பில் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களில் இரண்டு பேர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனிடையே சுமார் 500 பேர் கழிவுகள் எரிக்கப்பட உள்ள தனியார் நிறுவன வளாகத்திற்கு பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் உடனடியாக கலைத்தனர்.
The post 40 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்ட போபால் விஷ கழிவுகளை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து இருவர் தீக்குளிப்பு appeared first on Dinakaran.