இந்த நிலையில்,லெவல் 1 பதவிகளுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி விதிமுறைகளை ரயில்வே வாரியம் தளர்த்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஐடிஐ டிப்ளமோ அல்லது அதற்கு சமமான பயிற்சி பெற்றவர்கள் அல்லது தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில்(என்சிவிடி) வழங்கிய தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் லெவல் 1 பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தொழில்நுட்ப பிரிவு துறை பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பயிற்சி சான்றிதழுடன் ஐடிஐ டிப்ளமோ கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
The post ரயில்வேயில் லெவல்- 1 பதவிக்கான கல்வி தகுதி தளர்வு: ரயில்வே வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.