பிரான்ஸ் போர் கப்பல் இன்று கோவா வருகிறது

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் போர் கப்பல் சார்லஸ் டி கல்லே இன்று கோவா துறைமுகம் வருகிறது. உலகின் மிக பெரிய போர் கப்பல்களை கொண்டுள்ள நாடு பிரான்ஸ். அந்த நாட்டின் மிக பெரிய போர் கப்பலான சார்லஸ் டி கல்லே தற்போது இந்திய பெருங்கடலில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகளுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அணு சக்தியால் இயங்கும் சார்லஸ் டி கல்லே கப்பல் விமானம் தாங்கி போர் கப்பல் ஆகும்.இந்த நிலையில் சார்லஸ் டி கல்லே இன்று கோவா துறைமுகம் வருகிறது. இதை தொடர்ந்து கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு செல்கிறது.

இதுகுறித்து பிரான்ஸ் துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1998ம் ஆண்டு இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது. தற்போது இந்திய பெருங்கடலில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சார்லஸ் டி கல்லே இன்று கோவா வருகிறது. இந்திய துறைமுகங்களை தொடர்ந்து இந்தோனேசியா பிராந்தியத்திற்கு கப்பல் செல்லும். அதை தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் செல்லும் கப்பல் அங்கு பயிற்சியில் ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.

The post பிரான்ஸ் போர் கப்பல் இன்று கோவா வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: