முசாபர்நகர் கலவர வழக்கில் உ.பி அமைச்சர் மீது குற்றச்சாட்டு பதிவு

முசாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 2013ல் நடந்த கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்த கலவரம் தொடர்பாக உத்தரபிரதேச திறன்மேம்பாடு, தொழிற்கல்வித்துறை அமைச்சர் கபில் தேவ் அகர்வால், முன்னாள் ஒன்றிய அமைச்சர் சஞ்சீவ் பல்யான், உ.பி முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராணா, சமாஜ்வாடி கட்சி மாநிலங்களவை எம்.பி ஹரேந்தர் மாலிக் உள்ளிட்டவர்கள் மீது, முசாபர்நகர் எம்.பி.-எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

நேற்று சிறப்பு எம்பி-எம்எல்ஏ நீதிமன்ற நீதிபதி தேவேந்திர சிங் பவுஸ்தார் அமைச்சர் கபில் தேவ் அகர்வால் உள்பட 19 பேர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். இதில் அமைச்சர் கபில்தேவ் அகர்வால் தவிர, விஎச்பி தலைவர் சாத்வி பிராச்சி, பாஜ முன்னாள் எம்பி பர்தேந்து சிங், சர்ச்சைக்குரிய சாமியார் யதி நரசிங்கானந்த், பாஜ முன்னாள் எம்எல்ஏக்கள் அசோக் கன்சால், உமேஷ் மாலிக், உபி முன்னாள் அமைச்சர் அசோக் கட்டாரி ஆகியோர் அடங்குவர்.

The post முசாபர்நகர் கலவர வழக்கில் உ.பி அமைச்சர் மீது குற்றச்சாட்டு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: