உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார் ஓய்வு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சி.டி.ரவிக்குமார் நேற்றோடு ஓய்வு பெற்றார். கடந்த 1960ம் ஆண்டு கேரளாவில் பிறந்த அவர் விலங்கியல் படிப்பில் பட்டம் பெற்றவுடன் கோழிக்கோட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை முடித்தார். இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

கடந்த 2009ம் ஆண்டு கேரளா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.டி.ரவிக்குமார் கடந்த 2021ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். நாளையுடன் ஓய்வு பெறும் இவருக்கு நேற்றே கடைசி பணி நாள் ஆகும். மரபுப்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. நீதிபதி சி.டி.ரவிக்குமார், பண மோசடி தடுப்பு சட்டம், கோவை குண்டு வெடிப்பு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், நில அபகரிப்பு விவகாரத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்தது உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்.

The post உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார் ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: