ஒரே வாரத்தில் 3 கோடி மக்கள் குறைகளுக்கு தீர்வு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைகள் துறை செயலாளர் னிவாஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அரசு சேவையில் பொதுமக்களின் விண்ணப்பங்கள் மற்றும் குறைகளை தீர்க்க பிரஷாசன் காவ்ன் கி ஓரே திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்கீழ் கடந்த 19 முதல் 24 வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஒருவார குறைதீர் முகாமில் மொத்தம் 2,99,64,200 விண்ணப்பங்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதில், பொதுமக்கள் குறைகள் தொடர்பான 18.29 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தலைமைச் செயலாளர்கள், நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களால் இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.

The post ஒரே வாரத்தில் 3 கோடி மக்கள் குறைகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: