திருவாரூர், டிச. 30: திருவாரூர் பி சேனல் பாசன வாய்க்காலில் இருந்து வரும் சாக்கடை கழிவுகள் மற்றும் ஆகாயதாமரை செடிகளை அகற்றி தூர்வாரி தர வேண்டும் என பொது மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் நகரில் விளமல் அருகே ஒடம்போக்கி ஆற்றிலிருந்து பிசேனல் பாசன வாய்க்காலானது பிரிந்து நகருக்குள் சுமார் 4 கிமீ தூரம் சென்று கேக்கரை பகுதியில் முடிவடைகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பாசன வாய்க்காலாக இருந்து வந்த இந்த வாய்க்காலில் தற்போது கழிவுநீர் கலக்கப்படுவதால் அந்த நீரினை விவசாயத்திற்கு பயன்படுத்த விவசாயிகள் தயங்கி வருகின்றனர்.மேலும் மழை காலங்களில் இந்த வாய்க்கால் செல்லும் பகுதியில் உள்ள குளம், குட்டைகளிலும் கழிவுநீர் கலப்பதால் அதில் உள்ள நீரினை பயன்படுத்துவதற்கு மக்கள் தயங்கி வரும் நிலையில் வேறு வழியின்றி பயன்படுத்தினாலும் உடலில் அரிப்பு, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்ப்பட்டு வருகின்றன.
எனவே கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்களும், விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே கழிவுநீர் கலப்பதையும், ஆகாயதாமரை செடிகளையும் முழுமையாக அகற்றி வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணி துறையினருக்கும் அப்பகுதி பொது மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பி சேனல் பாசன வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகளை அகற்றி தூர் வார வேண்டும் appeared first on Dinakaran.