கொடைக்கானலில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டி

திருச்சி.ஜன.1: கொடைக்கானலில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திருச்சி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. கடந்த வாரம் கொடைக்கானலில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் தமிழ்நாடு சார்பில் திருச்சியை சேர்ந்த சிலம்பம் உலக சம்மேளனத்தின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தனித்திறமை போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் பரிசு பெற்றனர். மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

வெற்றிபெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளை சிலம்பம் உலக சம்மேளன தலைவர் கராத்தே சங்கர், தமிழ்நாடு சிலம்பம் சங்க பொதுச்செயலாளர் பத்மா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

The post கொடைக்கானலில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டி appeared first on Dinakaran.

Related Stories: