உடன்குடி, ஜன. 1: உதிரமாடன்குடியிருப்பு ரூ.6 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிகளை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
உடன்குடி யூனியன் வெங்கட்ராமானுஜபுரம் பஞ். உதிரமாடன்குடியிருப்பில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். யூனியன் சேர்மன் பாலசிங், வெங்கட்ராமானுஜபுரம் பஞ்சாயத்து தலைவி பால சரஸ்வதி, துணை தலைவர் ராஜ்குமார், பிடிஓக்கள் இப்ராகிம் சுல்தான், சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளர் அணி மகாவிஷ்ணு, உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப்அலி பாதுஷா, ஜான்பாஸ்கர், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், செட்டியாபத்து கோயில் அறங்காவலர் குழு தலைவர் மகேஸ்வரன், கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் ஷேக் முகம்மது, மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், தன்ராஜ், உதிரமாடன்குடியிருப்பு கிளை செயலாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் கணேசன், சத்யசெல்வன், பூவலிங்கம், ஜார்ஜ், அருள், சுடலைமணி, தயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post உதிரமாடன்குடியிருப்பில் ரூ.6 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.