வேலூர், ஜன.1: பொது இடங்களில் ஜோடியாக சுற்றிய பெண் ஏட்டு, காவலரை வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஒருபிரிவில் பெண் தலைமை காவலர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகிவிட்டது. அதேபோல் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த 2ம் நிலை காவலருக்கும் ஏற்கனவே திருமணமான நிலையில், பெண் தலைமை காவலருடன் தொடர்பு ஏற்பட்டு பொது இடங்களில் ஜோடியாக சுற்றி வந்துள்ளனர். இதுதொடர்பான புகார்கள் வடக்கு மண்டல ஐஜி அலுவலகத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து டிஐஜி தேவராணி இதுதொடர்பாக, விசாரணை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் பெண் தலைமை காவலர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், 2ம் நிலை காவலர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் என்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் செய்து நேற்று முன்தினம் டிஐஜி அதிடி உத்தரவிட்டார். அதோடு 2பேருக்கும் மாற்று பணி வழங்காமல் காவல்நிலைய பணிகள் மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜோடியாக சுற்றிய பெண் ஏட்டு, காவலர் அதிரடி டிரான்ஸ்பர்: வேலூர் சரக டிஐஜி நடவடிக்கை appeared first on Dinakaran.