இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல சுற்றி சிறுவர்கள் விழிப்புணர்வு:வேலூரில் போக்குவரத்து போலீசார் ஏற்பாடு

வேலூர், ஜன.1: வேலூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி சிறுவர்கள் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வேலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், விபத்தில் காயமடைவது மற்றும் உயிரிழப்பதை தடுக்கவும் கடந்த டிசம்பர் 1ம்தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு போக்குவரத்து போலீசார் பொம்மைகள், சாவிகொத்து மற்றும் பூக்கள் வழங்கி பாராட்டினர்.

அதோடு ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து எல்.இ.டி டிவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் பைக் ஓட்டிகள் ஹெல்மெட் அணியவேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் முன்னிலையில் அல்லாபுரத்தை சேர்ந்த சிலம்பு பயிற்சி பெற்று வரும் 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் தலையில் ஹெல்மெட் அணிந்து வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது தலைக்கவசம் என்பது வாகன ஓட்டிகளுக்கு உயிர்கவசம் என முழக்கமிட்டனர்.

The post இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல சுற்றி சிறுவர்கள் விழிப்புணர்வு:வேலூரில் போக்குவரத்து போலீசார் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: