திருத்துறைப்பூண்டி, ஜன. 1: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் கட்டிமேடு ஊராட்சியின் வளர்ச்சித்திட்ட மற்றும் பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டமும், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையிலும், துணைத்தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக ஊராட்சி மன்றத்தலைவர் பேசுகையில் தமிழ்நாடு முதல்வரின் பொற்கால ஆட்சியில் அரசின் மூன்று அடுக்கு அரசு அதிகாரிகளின் தங்கு தடையின்றி வளர்ச்சி திட்டப்பாதையிலும், உயர் மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைகள் மற்றும் நிர்வாக அனுமதி படி நாங்கள் பொறுப்பேற்ற கட்டிமேடு ஊராட்சி மன்றம் 2019-2020 முதல் 2024-2025 திட்ட காலங்களில் சுமார் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பாதையில் மக்களுக்கு தேவையான இன்றியமையாக கட்டடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகம், துணை சுகாதார மையம், அங்கன்வாடி, வேளாண்மை விரிவாக்கம் மையம் கட்டிடங்கள் கட்டப்பட்டும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிவளாகம் சுற்றுச்சுவர் இரண்டு பழைய பள்ளி கட்டிடங்கள் புதுப்பித்தும் வர்ணம் பூசப்பட்டும், குடிநீர் இணைப்புகள் சுகாதார வளாகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்பட்டும், சாலைகள் தார்சாலைகளாகவும், அய்யனார் கோவில்பத்து முதல் அக்பர் காலனி வரை குடிநீர் பைப் லைன்கள் விஸ்தரிப்பும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 2020-2021 ஆண்டுகளில் சமுதாய உறிஞ்சிக்குழி, குப்பை தரம் பிரித்தல், கொட்டகை, மண்புழு உரம் தயாரித்தல், செங்குத்து மழைநீர் உறிஞ்சுக்குழிகள், மேலும் தெற்கு தெரு சாலையை தார் சாலையாக மேம்பாடு செய்தல், அரசு மேல்நிலைப்பள்ளி முதல் சிக்கந்தர் வீடு வரை பைப்லைன் விஸ்தரித்தல், ரைஸ் மில் தெரு, குடிநீர் குழாய் விஸ்தரிப்பு, ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் சத்திரம் மற்றும் கடைக்காரத்தெரு வரை பைப்லைன் விஸ்தரிப்பு செய்யப்பட்டது.
2021-2022 ம் ஆண்டில் மகளிர் சுகாதார வளாகம், எல்லை நாகலடி பழைய கிணறு மற்றும் சத்திரத் தெரு பழைய கிணறு அருகில் மோட்டார் அறைகள், கட்டப்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாராத கிணறை தூர்வாரி, தூய்மைப்படுத்தி மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது மற்றும் அகமது தெரு, தெற்கு தெரு, ரஹ்மானியத் தெருவிற்கு பைப் லைன்கள் விஸ்தரிப்பும் செய்யப்பட்டுள்ளன. 2022-23 ம் நிதி ஆண்டில் உரக்குழி, சுற்றுச்சுவர், சமுதாய உறிஞ்சுக்குழிகள், பிளாஸ்டிக் மறுசுழற்சி கட்டிடம், சிறிய சுகாதார வளாகம், எலக்ட்ரிக் குப்பை வண்டி கொள்முதல், மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் பத்மநாபன் வீடு வரையும், குடிநீர் பைப் லைன்கள் விஸ்தரிப்பும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 2023-2024ம் நிதி ஆண்டில் சிறிய சுகாதார வளாகம், ஆசாரி ஆற்றங்கரை தெரு சாலையை தார்சாலையாகவும், அரசு மேல்நிலைப்பள்ளி முதல் எல்லைநாகலடி வரையும், மேலும் பள்ளிவாசல் வரையும், ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் மேலத்தெரு வரையும், பைப்லைன் விஸ்தரிப்பு செய்யப்பட்டது. மேலும் பழைய படித்துறைகள் புதிதாக கட்ட வேண்டுமானால் ஒவ்வொரு படித்துறை கட்டவும் ரூ.2 லட்சம் மதிப்பீடு செலவு ஆகும். ஆனால் ஒன்பதுக்கும் மேற்பட்ட பழைய படித்துறைகள் புணரமைக்கப்பட்டும், செட்டிகுளம் தூர்வாரப்பட்டும் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டதோடு 2019 முதல் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றது முதல் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மேம்பாடு அடைய விழிப்புணர்வு நிகழ்வுகளின் மூலம் தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் வளவனாற்று கரைகளிலும் ஊரைச் சுற்றி மரங்கள், கோட்டகம் சாலைக்கு தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கட்டிமேடு மேற்குபுறம் 200 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு ரயில்வே கீழ்ப்பாலம் (எல் யூ சி) அமைக்க பொதுமக்கள் ஒத்துழைப்போடு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர்களை அணுகி ஏற்பாடு செய்யப்பட்டதோடு நிரவி புயல் மற்றும் வெள்ளக்காலங்களில் முகாம்கள் அமைத்து மக்கள் தங்க வைத்து உணவு வழங்கப்பட்டதோடு, வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருந்த சுமார் 36 குடும்பத்தார்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டு தற்சமயம் அதில் ஒரு பகுதியினர் அரசின் திட்டங்களில் வீடுகள் கட்டப்பட்டும் உள்ளன.
முதியோர் ஓய்வூதியம், மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகைகள் மற்றும் கலைஞர் மகளிர் உதவித்திட்டத்தின் மூலம் எண்ணற்ற மகளிர் பயன்பெற பெரும் உதவி ஊராட்சி மன்றம் புரிந்தது என்பதும் கட்டிமேடு தூய்மையான மற்றும் சுகாதாரமான ஊராட்சியாகவும், கல்வித்துறையின் மூலம் “விழுதுகள்” என சிறந்த ஊராட்சியான பாராட்டு சான்றிதழ் பெற்றும் முன்மாதிரி கிராம ஊராட்சி என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் வழங்கப்பட்ட ஊராட்சியாகவும் மதநல்லிணக்க ஊராட்சி என தமிழக அரசால் 10 லட்சம் பரிசு வழங்கப்பட்ட ஊராட்சியாகவும் திகழ்கின்றன பெரிய வியத்தகு சாதனைகள் ஆகும். முடிவில் செயலர் புவனேஸ்வரன் நன்றி கூறினார்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தமயந்தி, சுஜாதா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் தமிழ்ச்செல்விமதி, ஜெயபால், ரஜபுனிஷாபேகம், நிலோபியா, வடிவழகிசெந்தில், வீரமணி, சரண்யாமுத்துக்குமார், சமூக ஆர்வலர்கள் செல்வம், ரவிச்சந்திரன், தமிழ்ஜோதி, ஞானசேகரன், சிவக்குமார், அன்பழகன், ரஹமத்துல்லா, ஏசுகுமார், ஆசிரியர் செல்வகுமார், அப்துல்முனாப், ஹனிப், தண்டபாணி, அப்துல்சலாம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
The post மதநல்லிணக்கத்திற்கு $10 லட்சம் பரிசு பெற்ற ஊராட்சி appeared first on Dinakaran.