கடையக்குடி முதல் பூதலூர் வரை புதிய பேருந்து சேவை துவக்கம்

தஞ்சாவூர், ஜன. 1: திருவையாறு சட்டமன்றத் தொகுதி இந்தலூர் ஊராட்சி கடையங்குடியில் புதிய பேருந்து சேவையை மத்திய மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி துவக்கி வைத்தனர்.

பூதலூர் வட்டம் கடையக்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். எம்பி., முரசோலி, எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் ஆகியோர் பேருந்து சேவையை துவக்கி வைத்தனர். இதில், ஒன்றிய பெருந்தலைவர் செல்லக்கண்ணு, ஒன்றிய செயலாளர் முருகானந்தம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருக்காட்டுப்பள்ளி, பத்தாளபேட்டை, இந்தலுார் வழியாக பூதலூர் செல்லும் இந்த பேருந்து சேவையால் ஏராளமான மக்கள் பயன்பெறுவர்.

The post கடையக்குடி முதல் பூதலூர் வரை புதிய பேருந்து சேவை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: