திருச்சி, ஜன.1: திருச்சி தேசிய கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை முதுகலை மற்றும் ஆராய்ச்சி பிரிவு, “பாரம்பரிய தானியங்கள் நவீன வளர்ச்சி 2K24” எனும் தலைப்பில் நேற்று தேசிய அளவிலான கருத்தரங்கை நடத்தியது.
தாவரவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர். M.கோப்பெருஞ் சோழன் ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கு, உணவுப் பாதுகாப்பு, நிலையான வேளாண்மை மற்றும் மனித ஆரோக்கியம் போன்ற சமகால சவால்களை எதிர்கொள்ள பாரம்பரிய தானியங்களின் முக்கியத்துவத்தை ஆராயும் வகையில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை ஒன்று திரட்டப்பட்டது.
சென்னையில் நந்தனம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் D. கந்தவேல், கோவை IFGDT வனசூழலியல் மற்றும் காலநிலை மாற்றப்பிரிவு விஞ்ஞானி டாக்டர் K. பன்னீர்செல்வம், தஞ்சை தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (NIFTEM-T) இணைப் பேராசிரியர் டாக்டர் S.விக்னேஷ் மற்றும் உதவி பேராசிரியர் டாக்டர் N. பஸ்கரன் ஆகியோர், தினை, பாசி, பயறு வகைகள் மற்றும் பாரம்பரிய தானியங்களின் சுற்றுச்சூழல் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகளை வலியுறுத்தினர்.
தாவரவியல் துறைத்தலைவர் டாக்டர்.B.முத்துக்குமார் வரவேற்றார். தேசிய கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர்.K.குமார், தாவரவியல் துறையின் முயற்சிகளை பாராட்டினார். துணைமுதல்வர் (உதவி) டாக்டர். V.நந்தகோபாலன், துணை முதல்வர் (சுயநிதி) டாக்டர்.D. பிரசன்னா பாலாஜி மற்றும் அறிவியல் துறை டீன் டாக்டர் M.முரளிஆகியோர் சிறப்புரையாற்றினர். டாக்டர்.M.கோப்பெருஞ்சோழன் நன்றி கூறினார்.
The post திருச்சி தேசிய கல்லூரியில் பாரம்பரிய தானியங்கள் நவீன வளர்ச்சி கருத்தரங்கு appeared first on Dinakaran.