புதுக்கோட்டையில் ஆணழகன் போட்டி

புதுக்கோட்டை, டிச.30: புதுக்கோட்டையில் நடந்த ஆணழகன் போட்டியில் 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கட்டுடல் மேனியில் பல்வேறு வகையான பொசிஷன்களை செய்துகாட்டி பார்வையாளர்களை அசத்தினர்.
புதுக்கோட்டை மேல ராஜா வீதியில் உள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் கழகம் நடத்திய ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 75க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டியானது 50 கிலோ எடையில் இருந்து 75 உடலில் எடைக்கேற்ப பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் தங்களது கட்டுடல்மேனியை பல்வேறு வகையில் செய்து காண்பித்து பார்வையாளர்களை அசத்தினர். மேலும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது உடலை வைத்து பல்வேறு பொசிஷன்கள் செய்து காட்டிய போது கூடி இருந்தவர்கள் விசில் அடித்து கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர். வேலும் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் ஐந்து இடங்களை பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

The post புதுக்கோட்டையில் ஆணழகன் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: