மிதுனம்

சூரியன் புதன் வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் நிறை குறைகள் உண்டு. எதிலும் நிதானம் கவனம் தேவை. காலியாக இருக்கும் பிளாட்டுக்கு புதிய வாடகைதாரர்கள் வருவார்கள். அதனால் வருமான இழப்பு நீங்கும். சனி பார்வை காரணமாக நரம்பு சம்பந்தமான வலிகள் உபாதைகள் வந்து நீங்கும். சுக்கிரன் பார்வை காரணமாக எதிர்பார்த்த பெரிய தொகை புதன்கிழமை கைக்கு வரும். மாமியார் மருமகள் இடையே இருந்த மனக்கசப்புகள் மறைந்த நல்லுறவு மலரும். குரு சஞ்சாரம் காரணமாக கணவர் உடல்நிலை பாதிக்கப்படலாம். கன்னிப் பெண்கள் பெற்றோர்களின் அறிவுரைகள் ஆலோசனைகளை கேட்பது நலம் தரும். சந்திரன் சஞ்சாரம் காரணமாக பெண்களுக்கு விரக்தி சோர்வு மன அழுத்தம் வந்து நீங்கும்.

பரிகாரம்: தினமும் காலை மாலை லலிதா ஸஹஸ்ரநாமம் படிக்கலாம் கேட்கலாம். ஏழை நோயாளிகளின் மருத்துவ செலவிற்கு உதவலாம்.