(4.12.2025 முதல் 10.12.2025 வரை)
சாதகங்கள்: லாபாதிபதி செவ்வாய் ராசிக்கு ஏழில் அமர்ந்து ராசியைப் பார்வையிடுகிறார். ராசிக்கு இரண்டில் குரு உச்சம் பெற்றிருக்கிறார். ஆறாம் இடத்தில் சூரியன் அமைந்து ஆத்ம பலத்தை உண்டாக்குகின்றார். அரசாங்க அனுகூலம் உண்டு. இத்தனை நன்மைகளும் மிதுன ராசி நேயர்கள் பெறுவார்கள். பணப் பற்றாக்குறை இருக்காது. செவ்வாய் சுப பலம் பெற்றிருப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு எதிர்பார்த்த நல்ல காரியங்கள் இப்பொழுது நிறைவேறிவிடும். ஏற்கனவே உள்ள வேலையில் இருந்து அதிக சம்பளமும் வாய்ப்பும் உள்ள வேலைக்கு சிலர் மாறுவீர்கள். சகோதரர்களுடன் இணக்கம் ஏற்படும். கலைத்துறைக்கான கிரகம் பலமாக இருப்பதால் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பும் ஆதாயமும் உண்டு.
கவனம் தேவை: சிலருக்கு இடமாற்றம் ஊர்மாற்றம் ஏற்படலாம். குரு தனஸ்தானத்தில் இருந்தாலும் வக்ர கதியில் இருப்பதால் நீங்கள் திட்ட மிடாத செலவுகளால் கடன் வாங்க நேரிடலாம். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படலாம்.
பரிகாரம்: அபிராமி அந்தாதியின் ஏதாவது ஒரு பாடலை தினம் மாலை விளக்கு வைத்துச் சொல்லுங்கள். அன்னையின் அருள் கிடைக்கும்.
