மேஷம்

(11.6.2026 முதல் 17.6.2026 வரை)

சாதகங்கள்: இரண்டு சுபகிரகங்கள் கடகத்தில் இருக்கிறார்கள். அதில் குரு உச்சம் பெற்றிருக்கிறார். அவர் பாக்யாதிபதி. மற்றொருவர் 2, 7க்கு உடையவர். குரு உங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதாலும், அவரோடு தனகாரகன் சேர்ந்திருப்பதாலும், லாபம் கிடைத்துவிடும். ராகு பகவான் 11-ஆம் இடத்தில் சாதகமாக இருக்கிறார். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். ஆதாயம் அதிகரிக்கும். பகை விலகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கும். இழப்புக்களை ஈடு செய்யும் முயற்சியில் இறங்குவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முன்னேற்றத்தை நோக்கி நகரும். கலைத்துறையினர் ஆதாயம் பெறுவார்கள். தகவல் தொடர்புத் துறைகளில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

கவனம் தேவை: உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருங்கள். விரயத்தில் சனி இருப்பதால், எந்தக் காரியத்தையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் பிரச்னைகள் வரலாம். தந்தையாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். ராசியில் செவ்வாயும் இரண்டாம் இடத்தில் சூரியன் இருப்பதையும் மறந்துவிட வேண்டாம்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்குங்கள். மகத்தான வாழ்வு கிடைக்கும்.